நீதிமன்றத்தை தவிர்த்து வந்தமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசிய லொத்தர் சபை முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.
நேற்றையதினம் (18) அவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்து நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு (CCD) முன்வைத்த விடயங்களை கருத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு நாடகம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் CCD விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய குறித்த விசாரணை தொடர்பாக நீதிமன்றில் முன்னிலையாகாக துசித ஹல்லொலுவவை கைது செய்ய பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் நேற்று பிடியாணை பிறப்பித்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment