பொரளையில் தாழிறங்கிய வீதி : மாற்று வழிகளை பயன்படுத்தவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

பொரளையில் தாழிறங்கிய வீதி : மாற்று வழிகளை பயன்படுத்தவும்

பொரளை பகுதியில் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனாநாயக்க சந்தி வரையான கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியில் வீதி இவ்வாறு தாழிறக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்று வழிகள்
மொடல் பார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் பார்ம் சந்தியிலிருந்து பொரளை மயான சுற்றுவட்டம் நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.

இராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து கொட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம்.

கொழும்பிலிருந்து மொடல் பார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்கா சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கொட்டா வீதி வழியாக ஸ்ரீ ஜயவர்தனபுர வீதிக்குள் நுழையலாம்.

No comments:

Post a Comment