தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்கள் உள்ளோரை இனி, ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இப்புதிய திட்டத்துக்கிணங்க, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கென, சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களை பூர்த்தி செய்யும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகவுள்ளது.
இதேவேளை, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் மாகாண கல்வித்துறை பிரதிநிதிகளுடன் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது பிரதியமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment