யூடியுபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவார் என எவ்வாறு கூற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இது ஒரு திட்டமிட்ட நிகழ்வா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சிக்கு துணை போயுள்ளது எனும் வருத்தத்திற்குரிய நாள் இதுவாகும் என சஜித் பிரேமதாஸ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுதா என அழைக்கப்படும் சுதத்த திலகசிறி எனும் சமூக ஊடக பிரபல நபர் தனது யூடியூப் சனலில் வெளியிட்ட வீடியோவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதாகி 14 நாட்கள் சிறையில் வைக்கப்படுவார் என தெரிவித்த எதிர்வுகூறல் தொடர்பிலேயே, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment