அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (25) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
இதன்படி பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (25) வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இடமாற்ற செயல்முறை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது தபால் ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment