WhatsApp கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 30, 2025

WhatsApp கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள பொலிஸார்

தங்களது WhatsApp கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

WhatsApp பயனர்களின் கணக்குகளுக்குள் ஊடுருவி, போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றி WhatsApp OTP எண்களைப் பெற்று போலி செய்திகளை அனுப்பி மோசடி செய்து வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தப் பண மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எந்தவொரு சூழ்நிலையிலும் Online கணக்குகளுக்கான OTP எண்களை ஏனைய தரப்பினருக்கு வழங்கக்கூடாது என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment