மாகாணத்துக்கு ஒரு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

மாகாணத்துக்கு ஒரு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

(எம்.வை.எம்.சியாம்)

போதைப் பொருட்களுக்கு அடிமையான நான்கு இலட்த்துக்கும் அதிகமானவர்கள் நாட்டில் வாழ்கின்றார்கள். ஆனால் நாட்டில் 4 புனர்வாழ்வு மத்திய நிலையங்களே உள்ளன. எனவே இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் மாகாணத்துக்கு ஒரு புனர்வாழ்வு மத்திய நிலையத்தையேனும் ஸ்தாபிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 950 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் சுமார் 5 டொன்களை கடந்த 5 மாதங்களில் எம்மால் கைப்பற்ற முடிந்துள்ளது. முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது நூறு வீத முன்னேற்றமாகும். நாட்டுக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை கைப்பற்றும் வகையில் பொலிஸ் திணைக்களம் சார்பில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கைக்குள் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆதனை நாம் வெளிப்படுத்தாவிட்டாலும் நாளாந்தம் அது இடம்பெறுகிறது. இந்த போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்காகவும் விற்பனை நோக்கத்துக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதிகளவிலான கடத்தல்கள் இந்த நாடுகளில் இடம்பெறுகின்றன. இலங்கைக்குள் பயன்பாட்டுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

போதைப் பொருட்களுக்கு அடிமையான நான்கு இலட்த்துக்கும் அதிகமானவர்களுக்கு நாட்டில் வாழ்கின்றார்கள் என நாம் நம்புகிறோம். தற்போது 4 மத்திய நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 140 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு வழங்கும் வசதிகள் காணப்படுகின்றன.

எனவே இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் மாகாணத்தில் ஒரு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் புனர்வாழ்வு மத்திய நிலையங்கைள அமைப்பதே எமது திட்டமாகும்.

போதைப் பொருளுக்கு அடிமையானர்வர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 950 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment