நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (01) காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. 

இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதனால் குறித்த பகுதிக்குள் காலணியுடன் உள்நுழைவதற்கு அனுமதி கிடையாது. 

மேலும் வெளிநாட்டு தூதுவர்களோ, அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ வந்தால் கூட உரிய முறைப்படி காலணிகளை அதற்குரிய இடங்களில் கழற்றிவிட்டுதான் ஆலய வளாகத்தினுள் உள் நுழைவது வழமை.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி காலணியுடன் உள்ளே நுழைந்தமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழா ஆரம்பமான அன்றையதினம் இராணுவ வாகனம் ஒன்றும் அத்துமீறி ஆலய வளாகத்தினுள் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment