ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (15) அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாத பிரதிவாங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதற்கமைய, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 5 மில்லியன் கொண்ட மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதவான் விதித்தார்.
தனது பதவிக் காலத்தில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடு தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்டும் விசாரணைகளுக்கமைய, கடந்த ஜூன் 27ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment