ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
தமக்கு எதிரான அவதூறாக ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி வெளியிட்ட கருத்து தொடர்பில், தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ரூ. 10 பில்லியன் இழப்பீடு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தாக்கல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திஸ்ஸ குட்டியாராச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தார்.
No comments:
Post a Comment