கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண்களும் நேற்று (28) முதன்முறையாக 19,500 புள்ளிகளைத் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 50.15 புள்ளிகள் உயர்ந்து 19,517.86 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரோயல் செரமிக் லங்கா, மெல்ஸ்டாகார்ப், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், எல்.பி.பினான்ஸ் மற்றும் சி.டி ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 97 நிறுவனங்களின் பங்கு விலைகள், அதிகரித்ததே அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண்ணின் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கிடையில், எஸ் அன்ட் பி எஸ்.எல்.20 விலைச் சுட்டெண் 19.47 புள்ளிகள் உயர்ந்து 5,774.51 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 6.16 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment