முன்னாள் அமைச்சர்கள் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் செல்போன்கள் கண்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

முன்னாள் அமைச்சர்கள் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் செல்போன்கள் கண்டெடுப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே இவை கண்டெடுக்கப்பட்டன.

இந்த தொலைபேசிகளுக்கு மேலதிகமாக சில, உபகரணங்களும் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்ட்டிலேயே மேற்படி கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சில முன்னாள் அமைச்சர்கள் அந்த கைதிகள் வார்ட்டில் உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்டோருடன் நூற்க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்ட்டில் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment