காசோலை தொடர்பான மோசடிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வங்கிகளில் போதுமான நிதி இல்லாமல், காசோலைகளை விநியோகிக்கும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன் அபராதமும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிணங்க உரிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் விரைவில் இது தொடர்பான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிக் கணக்குகளில் போதுமான நிதி இல்லாத நிலையில், காசோலைகளை வழங்குவோரும், மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவோரும் இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்படவுள்ளார்கள்.
வங்கிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதம், வங்கியில் உரிய நிதியின்றி திரும்பிய காசோலைக்குச் சமமான தொகையாக இருக்கும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசோலையை வழங்கிய ஒருவர், காசோலையைப் பெற்றவரின் கோரிக்கையின் கீழ் 90 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தத் தவறினால், இந்த திருத்தத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment