இலங்கை வந்துள்ள உலகப் புகழ்பெற்ற "ரெக்கே" இசைக்கலைஞர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 16, 2025

இலங்கை வந்துள்ள உலகப் புகழ்பெற்ற "ரெக்கே" இசைக்கலைஞர்

உலகப் புகழ்பெற்ற “ரெக்கே” இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி (Alpha Blondy) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி அபுதாபியிலிருந்து இன்று (16) அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு விமானப்படை மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment