இலங்கை வரும் ஹிருத்திக் ரோஷன் : நிகழ்வொன்றின் பிரதான விருந்தினராக பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 24, 2025

இலங்கை வரும் ஹிருத்திக் ரோஷன் : நிகழ்வொன்றின் பிரதான விருந்தினராக பங்கேற்பு

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

‘City of Dreams Sri Lanka’ என்ற பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதான விருந்தினராக அவர் பங்கேற்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த தகவல், ‘City of Dreams Sri Lanka’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விழாவிற்கு பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிரதான விருந்தினராக கலந்து கொள்வதாக இருந்தது. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஷாருக்கான் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளமையால் அவரது வருகை இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment