சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய 1 கிலோ கிராம்,
நாட்டரிசி ரூ. 120
சம்பா ரூ. 125
கீரி சம்பா ரூ. 132
விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவிற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 6 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது. முதற்கட்டமாக இம்மாவட்டங்களில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment