ஓரிரவு கொள்கை வீதம் மாறாது 7.75% ஆக பேணப்படும் : பணவீக்கத்தை 5% ஆக குறைக்க எதிர்பார்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 23, 2025

ஓரிரவு கொள்கை வீதம் மாறாது 7.75% ஆக பேணப்படும் : பணவீக்கத்தை 5% ஆக குறைக்க எதிர்பார்ப்பு - இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது.

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5% கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.

No comments:

Post a Comment