3 கிலோ கிராம் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது : பெறுமதி சுமார் 31 மில்லியன் ரூபா - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 16, 2025

3 கிலோ கிராம் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது : பெறுமதி சுமார் 31 மில்லியன் ரூபா

தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப் பொருளை இன்று (16) விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது.

இதன்போது, ரூ. 31 மில்லியன் மதிப்புள்ள சுமார் 3 கிலோ கிராம் 117 கிராம் குஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குஷ் போதைப் பொருள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து, இந்தியாவின் மும்பைக்கு பயணம் செய்து, அங்கிருந்து, இன்று (16) காலை 10.00 மணிக்கு இண்டிகோ விமானம் 6.E.-1185 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

குறித்த நபர் போதைப் பொருள் கையிருப்பை 20 பெட்டிகளில் சூட்சுமமான முறையில் பொதியிட்டு கொண்டு வந்துள்ளார்.

குஷ் போதைப் பொருளுடன் கைதான நபரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment