மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளி பழங்களுக்கு 17 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலன்களைப் பேணவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.
மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளை பொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அல் ஜசீரா
No comments:
Post a Comment