ஜப்பானின் கடற்கரையை தாக்கிய சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் : 133 நகர சபைகளிலிருந்து 900,000 இற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 30, 2025

ஜப்பானின் கடற்கரையை தாக்கிய சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் : 133 நகர சபைகளிலிருந்து 900,000 இற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுனாமி அலை 30 சென்றி மீட்டர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் ஒசாகாவிலிருந்து நகரின் தெற்கே உள்ள வகயாமா வரை 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் முன்னதாக கூறியது.

இந்த சுனாமி அலைகள் காரணமாக இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகர சபைகளிலிருந்து 900,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த நிலைமை காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment