மதுவரித் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஜூன் 30 வரை 120.5 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன் அது நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இலக்கில் 102.6 % வளர்ச்சியாகும்.
அத்துடன், 2022ஆம் ஆண்டில் 170.3 பில்லியன் ரூபா, 2023ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபா, 2024ஆம் ஆண்டில் 226.7 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு மதுவரித் திணைக்களம் செயற்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம் மற்றும் புகையிலைத் துறையை முறையாக ஒழுங்குபடுத்தி வரிப் பணத்தை அரசாங்கத்திற்கு அளவிடுவதற்கும், அத்தொழிலில் சட்ட விரோதமான பணப் பாய்ச்சல் தொடர்பான சட்டத்தை பலப்படுத்துதல், அதனால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகளைத் தடுப்பதன் ஊடாக மக்களுக்குத் தெளிவு படுத்தி, சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதற்காக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு அரசாங்கமும் மதுபானம் மற்றும் புகையிலை அடிப்படையில் வரி விதிப்பு இடம்பெற்றுள்ளமை, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமன்றி அதன் உற்பத்திகளை நுகர்வதை கட்டுப்படுத்துதல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்குக் காணப்படும் கேள்வியை குறைப்பதனால் சமூக மற்றும் சௌபாக்கிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment