சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் தீர்மானம் இல்லை - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, June 17, 2025

demo-image

சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் தீர்மானம் இல்லை

old-driving-license-sri-lanka
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான எத்தகைய இறுதித் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பத்திரிகைகள் சிலவற்றில் இது தொடர்பில் வெளியான செய்திகளை மறுத்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ள அவர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவில் இரத்து செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும் அதற்கான எந்த ஒரு இறுதித் தீர்மானத்தையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு பதிலாக புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *