கைதை தடுக்க முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்தார் தேசபந்து தென்னகோன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 29, 2025

கைதை தடுக்க முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்தார் தேசபந்து தென்னகோன்

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக சட்டத்தரணி அஜித் பத்திரண தாக்கல் செய்த பிணை மனுவை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அந்தத் திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அழைப்பாணை விடுத்துள்ளார்.

அத்துடன் முன்பிணை மனுவுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அன்றையதினம் தாக்கல் செய்யுமாறும் நீதவான், பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரகலய போராட்டம் நடந்த நேரத்தில் ஜனாதிபதி செயலகம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்யத் தயாராக இருப்பதாகக் கூறி, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் முன்பிணை மனுவை தாக்கல் செய்தபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment