மாலைதீவும், இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இரு சகோதர நாடுகள் : உயர்கல்வி, தொழில் பயிற்சிக்காக மாலைதீவு மாணவர்களுக்கு இலங்கை உகந்த இடம் - ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 29, 2025

மாலைதீவும், இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இரு சகோதர நாடுகள் : உயர்கல்வி, தொழில் பயிற்சிக்காக மாலைதீவு மாணவர்களுக்கு இலங்கை உகந்த இடம் - ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவிப்பு

மாலைதீவும், இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட 2 சகோதர நாடுகள் என, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தனது உரையில் தெரிவித்தார்.

மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றையதினம் அந்நாட்டின் அரச வரவேற்புடன் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் உரையாற்றியிருந்தனர்.

இதில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆற்றிய முழுமையான உரை வருமாறு, கௌரவ ஜனாதிபதி திசாநாயக்க அவர்களே, இரு தரப்பு கௌரவ உறுப்பினர்களே, ஊடகவியலாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், மாலை வணக்கம் !

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்கு கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள் வருகை நமது நீண்டகால நட்பின் அடையாளம் என்பதோடு நமது பொதுவான நோக்கங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். மாலைதீவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்ட இரண்டு சகோதர நாடுகள்.

நமது வரலாறு சாட்சியமளிக்கும் விதமாக, நமது புராணக்கதைகள் பின்னிப் பிணைந்துள்ளதோடு பல நூற்றாண்டுகள் பழமையான நட்பை நாம் பகிர்ந்து கொள்கிறோம். ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் மூலம் அந்த நெருங்கிய உறவுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. 1965 ஜூலை 26 ஆம் திகதி மாலைதீவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

நாம் சுதந்திரத்தின் 60 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் நீரந்தர மற்றும் நீடித்த நட்பின் 60 ஆண்டுகளையும் கொண்டாடுகிறோம்.

மாலைதீவுக்கான உங்கள் விஜயம் நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு நமது ஒத்துழைப்பின் நோக்கத்தை விரிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இன்றைய எங்கள் கலந்துரையாடல்களில், ஜனாதிபதி திசாநாயக்கவும் நானும் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, சுற்றுச்சூழல், மீன்பிடி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து கவனம் செலுத்தினோம்.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட பொருளாதார சவால்களை சமாளிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு பாராட்டுத் தெரிவித்தேன். உங்கள் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை ஒரு வலுவான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்று பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தம் சட்ட விடயங்களில் ஏற்படும் எந்தவொரு நடைமுறை தாமதங்களையும் தீர்க்க உதவும். மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நமது இராஜதந்திரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை திறம்பட செயல்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் நாம் உடன்பாடு கண்டுள்ளோம்.

நமது மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள், மாலைதீவு மற்றும் இலங்கை இடையேயான நெருங்கிய அண்டை நாடு உறவுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. எங்கள் சந்திப்பின் போது, எங்கள் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் முக்கியத்துவத்தை நாங்கள் அடையாளங் கண்டதோடு இரு நாடுகளில் வாழும் எங்கள் சமூகங்கள் செய்த சாதகமான பங்களிப்புகளை அங்கீகரித்தோம். இலங்கையில் மாலைதீவைச் சேர்ந்த பெரிய குழுவுக்கு உபசரிப்பு வழங்கியது தொடர்பில் ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

எங்கள் பிரஜைகளுக்கு தரமான தூதரக சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் உடன்பாடு கண்டுள்ளோம். இலங்கையில் வசிக்கும் மாலைதீவு நாட்டினருக்கு ஒரு வருடத்திற்கு மருத்துவ மற்றும் வாழ்க்கைத் துணை விசாக்களை வழங்க இலங்கை அரசாங்கம் அண்மையில் எடுத்த முடிவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் பயிற்சியில் முதலீடு செய்வது எனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்தத் துறையில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கான பாரிய மூலங்கள் இருப்பதை நாம் அடையாளங் கண்டுள்ளோம்.

இலங்கை கல்வியியலாளர்கள் கடந்த காலங்களில் மாலைதீவு கல்வித் துறைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர். உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்காக மாலைதீவு மாணவர்களுக்கு இலங்கை உகந்த இடமாக உள்ளது.

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுப் பகிர்வு முயற்சிகள் மற்றும் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்க நாங்கள் உடன்பட்டுள்ளோம்.

மாலைதீவில் மனித வள அபிவிருத்தியில் இலங்கை ஆற்றும் முக்கிய பங்கிற்காக இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீவு நாடுகளாக, மாலைதீவு மற்றும் இலங்கை இரண்டும் இந்துசமுத்திரத்தில், குறிப்பாக மீன்பிடித் துறையை பெரிதும் சார்ந்துள்ளன. குறிப்பாக, இது எங்கள் இரு நாடுகளிலும் உள்ள பலருக்கு பிரதான வருமான ஆதாரமாகும்.

சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலின் சவால்களை எதிர்கொள்வதற்கான எங்கள் பொதுவான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

நிலையான மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துவதில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தோம். எங்கள் கடல்சார் வலயங்

No comments:

Post a Comment