இலங்கை திரிபோஷ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம் : வணிகத் துறையில் 25 வருடத்திற்கும் அதிக அனுபவம் கொண்டவர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 13, 2025

இலங்கை திரிபோஷ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம் : வணிகத் துறையில் 25 வருடத்திற்கும் அதிக அனுபவம் கொண்டவர்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷண அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில், அமல் நிரோஷண அத்தநாயக்கவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட அமல் நிரோஷண அத்தநாயக்க, கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவராவார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலை (ஹானர்ஸ்) பட்டதாரியான இவர், பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். டென்னிஸில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

பல உள்ளூர் மற்றும் சர்வதேச நாமங்களின் வடிவமைப்பாளரான அமல் நிரோஷண அத்தநாயக்க, தெற்காசியாவிலும் இலங்கையிலும் பல சர்வதேச கண்காட்சிகளை இயக்கி நிர்வகித்துள்ளார்.

No comments:

Post a Comment