கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நேற்றையதினம் (14) வழக்கு ஒன்றிற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போதும், நீதிமன்ற வளாகத்திலிருந்து மீள அழைத்துச் செல்லும்போதும், ’ஹரக் கட்டா’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன, முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்து ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு, இன்று (15) முதல் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடப் பிரிவு தெரிவித்துள்ளது.
“சுமார் ஒரு கோடி செலவிட்டு என்னை தங்காலையில் தடுத்து வைத்திருப்பது, டிரான் அலஸ், தேசபந்து தென்னகோனுக்கு ரூ. 30 கோடி கொடுக்காமையே காரணம். இதையும் போடுங்கள்” என ஹரக் கட்டா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
“என்னை தங்காலையில் வைத்திருக்க மாதாந்தம் ரூ. 30 கோடி செலவிடப்படுகின்றது. தேசபந்துவின் தேவைக்காகவே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.”
No comments:
Post a Comment