உப்பு இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை : விளக்கமளித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

உப்பு இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை : விளக்கமளித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

சுகாதார அமைச்சகத்திலிருந்தோ அல்லது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களிடமிருந்தோ உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்த வித தடையையும் விதிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடயத்தை தெளிவுபடுத்தி அறிக்கையை வெளியிட்டார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி தவறானது எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அல்லது அதன் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்தால் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரப்பப்படுவதை அவதானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பி. ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் விளக்கமளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், 22.05.2025 நிலவரப்படி, 117 இறக்குமதியாளர்கள் உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கோரிக்கைக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேற்படி விண்ணப்பதாரர்கள் கோரியபடி, 22 ஆம் திகதி நிலவரப்படி, 150,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த உப்புத் தொகுதி துறைமுகத்தை அடைந்தவுடன் விரைவாக விடுவிப்பதற்கும் தேவையான அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதம் ஏற்பட இடமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பி. ஆனந்த ஜெயலால் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment