பிள்ளைகளுக்கு திருமணமாகாததால் விரக்தியில் உயிர்மாய்த்து கொண்ட தந்தை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

பிள்ளைகளுக்கு திருமணமாகாததால் விரக்தியில் உயிர்மாய்த்து கொண்ட தந்தை

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சங்கானை பகுதியை சேர்ந்த 63 வயதான ஐயாத்துரை கிருஷ்ணகுமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் 2 பிள்ளைகளும் பட்டதாரிகள் ஆவர். இந்நிலையில் இருவருக்கும் திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை இருந்துள்ளார். 

பின்னர் நேற்று (23) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ். நிருபர் பு.கஜிந்தன்

No comments:

Post a Comment