தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி

தொல்பொருள் திணைக்களத்தில் கடந்த 08 ஆண்டுகளாக நிலவும் 27 உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மீளாய்வு செய்வதற்கான குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதில் தடைகள் காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மென்டிஸ் தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தில் நிலவும் 7 பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தற்போது அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

822 காவலர்கள், 305 தொல்பொருள் உதவியாளர்கள் மற்றும் ஊழியர் தர பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மீளாய்வு செய்வதற்கான குழுவிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment