கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸின் புதிய விமானம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸின் புதிய விமானம்

துபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று நேற்று (08) பிற்பகல் 4.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இரட்டை எஞ்சின்களை கொண்ட இந்த A350 விமானம், மேம்பட்ட தொழிநுட்பங்களோடும் திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும், 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன.
அத்துடன் விமானத்தின் 5 திசைகளிலிருந்து கெமராக்கள் உள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதியும், Wi-Fi தொழில்நுட்பமும் உள்ளன. 

அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் வழியாக பயணிக்கும்போது தடை இல்லாத இணைய இணைப்பை வழங்கும் வசதியும் உள்ளது.

நீண்ட தூர பயணத்திற்கேற்றவாறு பெரிய குளியலறைகள மற்றும் சிறந்த ஆசனங்கள் ஆகியன உள்ளன.

எமிரேட்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு 4 முறை துபாயிலிருந்து இலங்கைக்கு சேவையை வழங்குகிறது.

இலங்கையின் சுற்றுலா இலக்கை அடைவதற்கான எமிரேட்ஸ் விமான சேவையின் ஒத்துழைப்பை இது எடுத்துக்காட்டுகிறது.

No comments:

Post a Comment