சொனிக் சொனிக்கிடம் விசாரணை செய்த சி.ஐ.டி. - News View

About Us

About Us

Breaking

Thursday, April 10, 2025

சொனிக் சொனிக்கிடம் விசாரணை செய்த சி.ஐ.டி.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, சஹ்ரான் கும்­ப­லுடன் தொடர்புகளைப் பேணி­ய­தாக கூறப்­படும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறி­யப்­பட்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரை சி.ஐ.டி.யினர் விசா­ரணை செய்­துள்­ளனர். 

தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்தி­யோ­கத்­த­ரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்­வி­சா­ர­ணைகள் நடாத்தப்பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள தக­வல்கள் தெரிவித்­தன.

குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விடயங்கள் தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ரணை செய்த, தற்போதைய பொதுமக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ரவி சென­வி­ரத்ன உள்­ளிட்டோர் சொனிக் சொனிக் தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்­தி­யி­ருந்­தனர்.

மாத்­தளை சஹ்­ரா­னுடன் தொடர்­பு­களை குறித்த அதி­காரி பேணி, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்­த­தாக காண்­பிக்க எடுக்­கப்­பட்ட முயற்சிகளில் குறித்த உளவுத்துறை அதி­கா­ரியின் பங்­க­ளிப்பு தொடர்பில் தெரி­ய­வந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், அவரை விசா­ரிக்க தொடர்ச்­சி­யாக தடைகள் இருந்த நிலை­யி­லேயே இப்போது, புதிய விசாரணைகளுக்கு அமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment