அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதிக்கப்படுவதாக சீனாவின் நிதியமைச்சு தற்போது அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் சீனா மீது 104% வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து சீனா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வரித் திருத்தமானது ஏப்ரல் 10 ஆம் திகதி நள்ளிரவு 12:01 CST முதல் அமலுக்கு வருவதாக சீன நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஏற்கனவே சரிவில் இருந்த ஐரோப்பிய சந்தைகள், அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதிப்பதாக அறிவித்துள்தைத் தொடர்ந்து மேலும் சரிவடைந்துள்ளன.
இங்கிலாந்தில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் FTSE 100 சுட்டெண் இன்று தற்போதுவரை 3.3% சரிவை சந்தித்துள்ள அதே நேரத்தில், German Dax 4% மற்றும் French Cac 40 ஆனது 4% சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்க சந்தைகள் BST 14:30 மணிக்கு திறக்கும்போது, இந்தச் செய்திகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என அறிய முடியுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment