மியன்மார், தாய்லாந்து மக்களுக்கு உதவி வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 2, 2025

மியன்மார், தாய்லாந்து மக்களுக்கு உதவி வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்களுக்கு உலர் உணவு, உடைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் கமகெதர திசாநாயக்க, ஏற்கனவே முறையான வழிமுறை மூலம் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான உதவி சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மியன்மார் மற்றும் தாய்லாந்து நில நடுக்கங்களால் உயிர் இழந்தவர்களுக்கு பௌத்த மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் அறிவுறுத்தல்களுக்கமைய, மதத் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மியன்மார் மற்றும் தாய்லாந்திற்கு உலர் உணவு, ஆடைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளைச் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்க தன்னார்வழர்களை முன்வருமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment