எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் மாதம் 24, 25 அல்லது ஏப்ரல் 28, 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்களிக்குகளை அளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து அரச ஊழியர்கள், பொலிஸார், முப்படையினர், உள்ளிட்ட அனைவரும் அந்தந்த அலுவலகங்களில் இந்த 4 நாட்களில் தங்களது வாக்குகளை அளிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை தொடர்பான விசேட பணிகளில் ஈடுட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தபால் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய அப்பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், கண்டி பெண்கள் மேல் நிலைப் பாடசாலையிலும், முப்படையினர் அந்தந்த இராணுவ முகாம்களில் நியமிக்கப்பட்ட உரிய அதிகாரி முன்னிலையில் இந்த 4 நாட்களில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் நடைபெற உள்ள 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்றையதினம் (16) அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 29 வரை அது முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
அன் பின்னர் உரிய வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையாயின், உரிய தபால் நிலையத்தில் அது தொடர்பில் விசாரித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment