உயிரிழந்த 167 கத்தோலிக்கர்கள் 'விசுவாசத்தின் சாட்சியாளர்கள்' : வத்திக்கானின் பிரகடனத்தை அறிவித்த பேராயர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 21, 2025

உயிரிழந்த 167 கத்தோலிக்கர்கள் 'விசுவாசத்தின் சாட்சியாளர்கள்' : வத்திக்கானின் பிரகடனத்தை அறிவித்த பேராயர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் ‘விசுவாசத்தின் சாட்சியாளர்கள்’ எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், விசுவாசத்தின் சாட்சியாளர்கள் எனும் பட்டியலில் உத்தியோகபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் ஆறாவது வருட நினைவு தினத்தையிட்டு இன்று (21) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்

இந்த புனித விழாவிற்கு பேராயர் தலைமை தாங்கியதோடு, மதகுருமார்கள், அருட்தந்தைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுகூர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment