புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இருக்கை முன்பதிவு வசதி உள்ள ரயில்களுக்கு, தற்போது வழியாக ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
“புத்தாண்டு சிறப்பு இரவு தபால் ரயில் (New Year Special Night Mail Train) என்ற பெயரில் ஒரு சிறப்பு ரயிலை ஆரம்பிக்கிறோம். இது கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இயக்கப்படும்.
இந்த ரயில் ஏப்ரல் 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரவு 07.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இதற்கிடையில், ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் காலி நிலையத்திலிருந்து அதிகாலை 4.00 மணிக்கு அநுராதபுரம் நிலையத்திற்கு ஒரு ரயில் புறப்படும்.
மேலும், ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பிலிருந்து காலிக்கு ஒரு ரயில் புறப்படும்.
அதே நேரத்தில் ஏப்ரல் 11, 12, 16 மற்றும் 21 ஆகிய திகதிகளில் காலை 06.10 மணிக்கு காலியில் இருந்து கொழும்புக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை, கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த வரை சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.
No comments:
Post a Comment