தனியார் பஸ்களில் இனி CCTV பாதுகாப்பு கெமரா இருந்தால் மட்டுமே அந்த பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது வீதி அனுமதிப்பத்திரங்களைப் பெறும்போது பஸ் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன.
இதில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்துவது அடங்கவில்லை. எனினும், இதுவும் அந்த நிபந்தனைகளின் தொகுப்பில் விரைவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுப் போக்குவரத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டமொன்றும் அவசியமாகும். பொதுப் போக்குவரத்தைப் பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்படி, தனியார் பஸ்களில் CCTV கெமராக்கல் இருப்பது, அந்த பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதோடு, அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment