சம்பியன்ஸ் கிண்ணத்தின் துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்துள்ளன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்துடன் இந்திய அணி ஆடவுள்ள நிலையில் போட்டிக்கான டிக்கெட் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் முன்னரே ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அதற்காக காத்திருந்தனர். இதனால் விற்பனை ஆரம்பித்த விரைவிலேயே 12 பிரிவுகளிலான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இதில் இலங்கை நாணயப்படி சுமார் ரூ. 950,000 அதிக விலை கொண்ட டிக்கெட்டுகளும் சில நொடிகளில் தீர்ந்துள்ளன. மிகக் குறைந்த விலை டிக்கெட் இலங்கை நாணயத்தில் சுமார் ரூ. 20,000 ஆகும்.
இதையடுத்து, நேரடி விற்பனை மூலம் கிடைக்கும் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.
இது குறித்து, ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அஹமது கூறுகையில், ‘இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், விற்பனை ஆரம்பித்து சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்து போகின்றன’ என்றார்.
No comments:
Post a Comment