(இராஜதுரை ஹஷான்)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்வை வரி சூத்திரத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரத்துச் செய்தது. நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரினோம். நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என முன்னாள் மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்மானத்தை கடந்த அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று தமது இயலாமையை மறைத்துக் கொள்ள பிறர் மீது பழிசுமத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கட்டணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கடந்த அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக் தொடர்பில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்த்தர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாகும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்வை வரி சூத்திரத்தை அப்போதைய அரசாங்கம் செயற்படுத்துவதை தடுக்கும் வகையில் எரிபொருள் விநியோகஸ்த்தர் சங்கம் 2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்திலும், 2023 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உத்தரவை பெற்றுக் கொண்டது.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகளை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்துவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு வலுசக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தியிருந்தது.
தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தின் மீது பழிசுமத்துவதை ஆளும் தரப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம் என்றார்.
No comments:
Post a Comment