நாட்டின் எரிபொருள் விநியோக செயன்முறையை சீர்குலைக்க முயற்சித்ததாக மேற்கொண்ட முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, எரிபொருள் விநியோக முகவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவின், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வழங்கும் கமிஷன் பணம் தொடர்பான சிக்கல் தொடர்பில், அதன் விநியோகச் செயற்பாட்டை சீர்குலைக்க ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை வேண்டுமென்றே தடுப்பது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைப்பது அல்லது பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற எந்தவொரு தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை CID யினர் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment