இலங்கையில் சிறுநீரக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

இலங்கையில் சிறுநீரக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு

சிறுநீராக நோயால் நாட்டில் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக 2023 ஆம் ஆண்டின் தரவுகளில் தெரிய வந்திருந்தது. இந்நிலையில், அதே ஆண்டில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 1,626 பேர் உயிரிழந்திருந்தனர்.

2023 - 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆகக் காணப்பட்டது. 300 பேர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்பட்டிருந்தனர்.

வட மத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 

சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் 2006 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. 

“விழிப்புடன் இருங்கள், ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள், சிறுநீரகங்களைக் காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளில் இம்முறை சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment