சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும், மகனும் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும், மகனும் பலி

சட்ட விரோதமாக பிணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும், மகனும் பலியான சம்பவம் ஒன்று நேற்று (05) இரவு சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது .

வீட்டு அயலில் சிறிய சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த மகன் மின் கம்பியில் சிக்கி அலரியதால் அவரைக் காப்பாற்றச் சென்ற 38 வயதான தாயும் மின்சாரம் தாக்கியதால் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அயல் வீடொன்றில் பொறியாக வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் இவர்கள் சிக்கியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி நிருபர்

No comments:

Post a Comment