இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் : விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உயர்மட்ட குழு வருகை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் : விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உயர்மட்ட குழு வருகை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலியில் சென்று மின் திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

அதேபோல அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

No comments:

Post a Comment