போக்குவரத்து பொலிஸாரின் வெகுமதித் தொகை அதிகரிப்பு : ஊக்குவிப்பதன் மூலம் கடமையின் செயல்திறனை மேம்படுத்துவதே நோக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

போக்குவரத்து பொலிஸாரின் வெகுமதித் தொகை அதிகரிப்பு : ஊக்குவிப்பதன் மூலம் கடமையின் செயல்திறனை மேம்படுத்துவதே நோக்கம்

போக்குவரத்துப் பிரிவுகளில் பணி புரியும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண கொடுப்பனவை அதிகரிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, தண்டப்பணம் மூலம் தற்போது வழங்கப்படும் வெகுமதித் தொகையை 25% இனால அதிகரிக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபரால் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

பெப்ரவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்குமாறு, பதில் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

குறித்த பணியில் ஈடுபடும் பொலிஸாரை பாராட்டி, ஊக்குவிப்பதன் மூலம் அவர்களது கடமைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளால், போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துக்கள், அதிக வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment