“மிலேனியம் சிட்டி” (Millennium City) வழக்கிலிருந்து முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவால் பராமரிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இல்லம் தொடர்பில் தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறி, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
சுமார் 20 வருடங்களாக இடம்பெற்று வந்த நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டு திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லமொன்றை சோதனையிட்டு, இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதன் ஊடாக தேசிய இரகசியச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment