EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2025

EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஆரம்பம்

ஊழியர்‌ சேமலாப நிதியத்தின்‌ கீழ்‌ அங்கத்தவர்களைப்‌ பதிவு செய்யும்‌ (AH பதிவு செய்யும்‌) புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்‌ திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில்‌ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன்‌ தொடர்புகொண்டு ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்வதாக, இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின்‌ ஊடாக ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்வதன்‌ வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப்‌ பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment