நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்கு, இலங்கை மின்சார சபையின் மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மின்சார தடை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மின் தடைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில், அதற்கான காரணத்தை இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றினூடாக தெளிவுப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, மின் கட்டணத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதியன்று காலை 11.13 மணிக்கு ஏற்பட்ட நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வே மின் தடைக்கு காரணம் எனவும், மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment