யோஷிதவின் பாட்டி டெய்சி ஆச்சிக்கு பயணத் தடை : அனைத்து சந்தேகநபர்கள் மீதும் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

யோஷிதவின் பாட்டி டெய்சி ஆச்சிக்கு பயணத் தடை : அனைத்து சந்தேகநபர்கள் மீதும் விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான, ‘டெய்சி ஆச்சி’ என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் விக்ரமசிங்கவுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

பண தூய்தாக்கல் மற்றும் ரூ. 59 மில்லியன் கூட்டு வங்கிக் கணக்கு தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இன்றையதினம் (11) பத்தரமுல்லவில் உள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், டெய்சி பொரெஸ்ட் பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரெஸ்ட் ஆகியோரது பெயரில் உள்ள ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், யோஷித ராஜபக்ஷ அப்பணத்தை பெற்ற வருமான ஆதாரம் குறித்து நியாயமான விளக்கத்தை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்கள் மீதும் பண தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என புத்திகமனதுங்க இங்கு சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment