சர்வதேச சங்கத்தின் தலைவராகிறார் இலங்கை பேராசிரியர் நீலிக்கா மாளவிகே - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

சர்வதேச சங்கத்தின் தலைவராகிறார் இலங்கை பேராசிரியர் நீலிக்கா மாளவிகே

இலங்கையின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான நீலிக்கா மாளவிகே தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ISID) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சர்வதேச சங்கம் தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது.

இந்நிலையில், தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் நீலிக்கா மாளவிகே 2027 ஆம் ஆண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியரான மாளவிகே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டத்தையும், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தொற்று நோய் ஆராய்ச்சியில், குறிப்பாக கொவிட் பரிசோதனை, வரிசைப்படுத்துதல் மற்றும் திரிபு அடையாளம் ஆகியவற்றில் வழங்கிய பங்களிப்புகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் SARS-CoV-2 கொவிட் வைரஸ் தொற்று நோயை கண்டறிந்ததில் அவரின் ஆராய்ச்சி முக்கியமான தொன்றாகும்.

No comments:

Post a Comment