இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கு சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (12) நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) இடம்பெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் பகல் ஆட்டமாக ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இதில் ஒருநாள் குழாத்தில் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளரான சிராஸ் இலங்கை ஒருநாள் குழாத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதும் இதுவரை அவர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம்
சரித் அசலங்க (அணித் தலைவர்), பத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெள்ளாலகே, ஜெப்ரி வன்டர்சே, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, மொஹமட் சிராஸ், இஷான் மாலிங்க.

No comments:

Post a Comment